தமிழகம்

டாக்டர் பாஸ்கரனின் நூல்கள் வெளியீடு

177views
நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெ. பாஸ்கரன் எழுதிய மூன்று நூலகள் – நெஞ்சில் நிறைந்த எழுத்தாளர்கள் (கலைமகள் பதிப்பகம்), சாப்பிட வாங்க (குவிகம் பதிப்பகம்), தர்மஸ்தம்பம் (ஜெயா பதிப்பகம்) – வெளியீட்டு விழா 23.12.2025 அன்று மாலை பாம்குரோவ் ஓட்டலில் உள்ள ஊர்வசி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர், மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் நூல்களை வெளியிட மூத்த பத்திரிகையாளர் திரு மாலன், கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் இதழ் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன் அவர்களும் பெற்றுக் கொண்டு, வாழ்த்தினார்கள்.
திருமதி என்.எஸ். பிரேமா, மேனாள் திருச்சி மாநகராட்சி ஆணையர் மூன்று நூல்களைப் பற்றி அறிமுகம் செய்தார். முன்னதாக திருமதி கலா பாஸ்கரன் இறைவணக்கப் பாடலைப்பாட, நிறைவாக டாக்டர் ஜெ. பாஸ்கரன் அவர்கள் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும், பதிப்பாளர்களும், உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!