தமிழகம்

மோகனா சுகதேவ் நூல்கள் வெளியீடு

307views
எழுத்தாளர், முனைவர் திருமதி மோகனா சுகதேவ் அவர்கள் வானதி பதிப்பகம் மூலம் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா 1.11.2025 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.  திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் தலைமை தாங்கி வெளியிட, பேனாக்கள் பேரவை நிறுவனர் என்.சி.மோகன்தாஸ் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டார்.
திறனாய்வுரை வழங்கியவர்கள்: மதுராந்தகியின் சபதம் – திரு காலச்சக்கரம் நரசிம்மா; பூஜைக்கு வந்த மலர்- திரு கே.என். சிவராமன்; நிலவே நீ சாட்சி – திரு ரவிபிரகாஷ்; உதய நிலா – திருமதி லதா சரவணன்.
வாழ்த்துரை வழங்கியவர்கள்: கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், திரு. என்.சி. மோகன்தாஸ், திரு அனந்த் ரவி, திருமதி சியாமளா கோபு மற்றும் சென்னை சாயி சங்கரா மேட்ரிமோனியல்ஸ் டாக்டர் என். பஞ்சாபகேசன், வரவேற்புரை திரு டி என் ராதாகிருஷ்ணன் வழங்க, ஏற்புரையை திருமதி மோகனா சுகதேவ் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு திரு மடிப்பாக்கம் வெங்கட். தொடர்புக்கு 9444427750
புகைப்படத்தில் :
என் பஞ்சாபகேஷன், என்.சி.மோகன்தாஸ், காலச்சக்கரம் நரசிம்மா, கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், உதயணன், மோகனா சுகதேவ், ரவி பிரகாஷ், கே.என்.சிவராமன், மடிப்பாக்கம் வெங்கட்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!