நிகழ்வு

காவிய நாயகியரும் சுடச்சுட சாம்பார் சாதமும்..

33views
” நான் கம்யூட்டரில்தான் புஸ்தகங்களை படிப்பது வழக்கம்.  அப்டி படிக்றச்ச என்தலை அடிக்கடி வலப்பக்கமிருந்து இடப்பக்கமும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமுமாக மாறி மாறி ட்ராவல் ஆகும்.  அப்டி படிச்சிட்ருக்றச்ச கிச்சனில் இருந்து வெங்காய பக்கோடா வாசனை வர..நான் அந்த புத்தக்கத்தை படிப்பதும் அடிக்கடி கிச்சன் பக்கமுமாக கவனித்து வந்தேன் – பக்கோடா வருமென.
பாதி படித்தும் பக்கோடா வரவில்லை.சிஸ்டத்தில் இருந்து எழுந்து போய் மனைவியிடம் , ” வெங்காய பக்கோடா வாசன வந்துது.நான் கம்யூட்டர்ல படிச்சுட்ருக்கப்ப டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நீ அத கொண்டு வரல போல.பரவால்ல.நான் அப்றமா மிச்சத்த படிச்சுக்கறேன்.நீ இப்ப அந்த பக்கோடாவ குடு.சாப்டறேன் ” னு கேட்டதுக்கு அவங்க சொன்ன பதில் : ‘ம்க்கும் , உங்களுக்காகத்தான் தட்ல வச்சு கொண்டு வந்தேன்.நீங்கதான் தலையை ஆட்டி வேணாம்னு சொன்னதால அதையும் நானே சாப்ட்டுட்டேன் , ஸாரிங்க.’
அட டா.வடை போச்சேங்கற மாதிரி அன்னிக்கு எனக்கு பக்கோடா போச்சு.” — எழுத்தாளர் பிரபுசங்கர் , பொ.வெ.ராஜ்குமாரின் ‘காவிய நாயகியர் ‘ நூல் வெளியீட்டு விழாவில்.

பத்ரிகையாளர் லேனா தமிழ்வாணன் , டாக்டர் பாஸ்கரன் ஜெயயராமன், எழுத்தாளர்கள் ஜி.எஸ்.எஸ் , என்.சி மோகன்தாஸ் ,உதயம்ராம் , TN ராதாகிருஷ்ணன் போன்ற பலர் பேச்சாளர்களாக கலந்து கொண்ட இந்த விழால , NR சம்பத், கல்லிடை நாணு , ரவி நவீனன்,சுஸ்ரீ, மோகனா சுகதேவ் , மாலா மாதவன், விஜி R கிருஷ்ணன் , பொற்கொடி , லதா ஷிவானி , பூவண்ணன் னு பல பிரபலங்கள சந்திச்சு பேச முடிஞ்சது.

நிகழ்ச்சியை வழக்கம்போல அழகாக தொகுத்து வழங்கினார் , நண்பர் பால சாண்டில்யன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் திரு.ராஜ்குமாருக்கு உதவியாக மலர்வனம் திரு.ராம்கி தம்பதியினர் பெரிதும் ஒத்துழைக்க, செவிக்கு உணவாக ஸ்வாரஸ்ய பேச்சுகளோடு முடிந்த புக் ரிலீஸ்க்கப்றம் சுவையான டின்னர்.
நெய்யில் பொரித்தெடுத்து பளபளப்பாக மின்னிய முந்திரிகளோடு கேசரி , சுடச்சுட சாம்பார் சாதம் , வெரைடி ரைஸ் ,உருள கார கறி , நீட்டு வடாம் , புளிப்பில்லாத தாளிப்பு சாங்கியத்தோடு தயிர் சாதம், ஊறுகா.. ஆஹா..
நட்பூஸ்ங்க படை சூழ அங்கே இருந்த திறந்தவெளி கேலரியில் அமர்ந்து படு ஸ்வாரஸ்ய அரட்டைகளோடு சாப்டறச்ச டின்னர் எக்ஸ்ட்ராவா ருசிச்சத அனுபவிக்க முடிஞ்சது.
– மடிப்பாக்கம் வெங்கட்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!