236views
ரவி நவீனன் அவர்களின் அஞர் நூல் வெளியீட்டு விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பற்பல பிரமுகர்கள் பிரபல எழுத்தாளர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர். நண்பர் உரத்த சிந்தனை உதயம் ராம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பாலசலடில்யன் நிரலுரை செய்தார்.
நல்ல மெதுவடை காபிக்குப் பின்னர் சரியாக 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நூலினை திரு தயாளன் வெங்கடாசலம் வெளியிட பேனாக்கள் பேரவையின் தலைவர் திரு என்சிஎம் மற்றும் சாவி அவர்களின் புதல்வி திருமதி உமா பிரசாத் அவர்களும் நூலின் முதல் பிரதிகளைப் பெற்றனர்.
விழாவில் ஓவிய சாம்ராட் ஜெயராஜ், கல்கி ரமணன், லேனா தமிழ்வாணன், நங்கை ஸ்வேதா, தயாளன் வெங்கடாசலம், என்சி மோகன்தாஸ், கண்ணன் விக்கிரமன், டாக்டர் பாஸ்கரன் மற்றும் லதா சரவணன் அவர்கள் உரையாற்றி செவிக்கு விருந்தளித்தனர்.
ரவி அவர்கள் சம்மந்தி திருமதி ராஜி இறை வணக்கம் பாடினார். விஜி கிருஷ்ணன் வரவேற்பு மற்றும் நவீன கவிகாளமேகம் டிஎன் ராதாகிருஷ்ணன் கவிநடையில் நன்றியுரை (யாரும் இப்படி ஒரு நன்றியுரையை ரசித்திருக்க மாட்டார்கள்) நவின்றார். மடிப்பாக்கம் வெங்கட் மேற்பார்வை.
முன்னிலையாக குமுதம் ரஜத், பத்திரிகையாளர் நூருல்லா, ராணி மைந்தன், கவிஞர் ராஜ்குமார், ஓவியர் ஷியாம், காவிரி மைந்தன், என் ஆர் சம்பத், கேஜி ஜவஹர், குமுதம் ராதாகிருஷ்ணன், இந்திரநீலன் சுரேஷ் (அனைவருக்கும் கும்பமேளா தீர்த்தம் கொடுத்தார்) என்று அரங்கம் நிறைந்த பிரபலங்கள் விழாவுக்கு மேன்மை தந்தனர். ரவி அவர்களின் ஏற்புரை அற்புதம்.
சரியாக 7.34 க்கு விழா நிறைவு பெற்றது. கிளம்பும் போது மிக்சர் மற்றும் பர்பி வீட்டில் செய்து அனைவருக்கும் வழங்கினர்.
-பாலசாண்டில்யன்
add a comment