தமிழகம்

குழந்தைகளின் உண்மையான கதாநாயகர்கள் அவர்களது தாய் தந்தையர் தான்; புளியம்பட்டி புத்தகத் திருவிழாவில் நடிகர் தாமு பேச்சு

529views
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஒன்பதாம் ஆண்டு புத்தகத் திருவிழா கே ஜி மஹாலில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் புளியம்பட்டி புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் பி எஸ் அன்பு தலைமை தாங்கினார். அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராணி லட்சுமி அன்பு முன்னிலை வகித்தார். விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார்.
விழாவில் திரைப்பட நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்போது ஒரு நல்ல நண்பன் நூறு புத்தகத்துக்கு சமம் ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம். எனவே புத்தகத் திருவிழாக்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று நல்ல நல்ல புத்தகங்களை வாங்கி குழந்தைகளை வாசிக்க ஊக்குவிக்க வேண்டும்.பெற்றோர்கள் குழந்தையிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் விருப்பங்களை, திறமைகளை அறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது தாய் தந்தையர் தான் உண்மையான கதாநாயகர்கள்- கதாநாயகிர்கள். ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் வயிற்றிலும் வாழ்நாள் முழுவதும் நெஞ்சிலும் சுமக்கிறாள். ஒரு தந்தை தான் பார்க்காத உலகத்தை நம் குழந்தை பார்க்க வேண்டும் என என்னை தோள் மீது சுமக்கிறான். இப்படியாக வாழும் தெய்வங்கள் தான் நம் பெற்றோர்கள். குழந்தைகளும் தன் தாய் தந்தையரின் அருமை பெருமைகளை, தியாகத்தை, அன்பை உணர்ந்து சிறந்த ஒழுக்கமுள்ள நல்ல மனிதனாக வாழ வேண்டும். குழந்தைகள் இல்லையென்றால் இந்த நாடே இல்லை. 12 ஆண்டுக்கு ஒரு முறை குறிஞ்சி பூ பூப்பதை போல உயர்கல்வி பயில அச்சாரமாக விளங்குவது பிளஸ் டூ வகுப்பு. மாணவ மாணவியரின் திறமையை முதலில் கண்டுபிடிப்பவர் ஆசிரியர்கள் தான். எனவே நமக்கு அறிவு ஞானத்தை வழங்கும், நமது திறமைகளை கண்டு அதை வெளிக்கொணரும் ஆசிரியர் பெருமக்களை ஒவ்வொரு மாணவ மாணவியரும் வணங்க வேண்டும், வாழ்த்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் கூறியதைப் போல கனவு காணுங்கள். இந்தியா வல்லரசாக இன்றைய குழந்தைகள் மற்றும் நாளைய இந்தியாவின் சிற்பிகளான நீங்கள் தான் அதற்காக உழைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கோவை அருண் ஐஏஎஸ் அகாடமி நிறுவன அகத்தமிழ் ஸ்ரீ அருண்குமார் டாக்டர் கனிமொழி சந்தோஷ், டாக்டர் கார்த்திகேயன், சித்ரா சுப்ரமணியன், குமர செந்தில் ராஜா, முகமது இப்ராகிம், அம்பாள் மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமூர்த்தி, சிந்தாமணி பள்ளி தாளாளர் லோகநாதன் விடியல் இயக்குனர்கள் வாணி தர்மராசு சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!