95views
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் சமத்துவபுரம் குடியிருப்பில் புலம் பெயரும் பெற்றோரின் குழந்தைகளுக்காக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸின் ஆலோசனையின்படி உண்டு உறைவிடப் பள்ளி (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவசிய வித்யாலயா) திறப்பு விழா நடந்தது. உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐ.செல்வராஜ் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் அ. பாலுமுத்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முருகம்மாள், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன், போகலூர் ஒன்றிய துணை தலைவர் ஆர். பூமிநாதன், மாவட்ட கவுன்சிலர் கே.கே. கதிரவன், போகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி. கலையரசி, தீயனூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். சாத்தாயி, ஆகியோர் கலந்து கொண்டனர். உதவித் திட்ட அலுவலர் எஸ். கர்ணன் நன்றி கூறினார். மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். பாஸ்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் புதுராஜா, முருகேஸ்வரி, போகலூர் வட்டார மேற்பார்வையாளர் (பொ) டி. திலகர்ராஜன் செய்திருந்தார். திருப்புல்லாணி வட்டார மேற்பார்வையாளர் சேதுபதி, ஆர்எஸ் மங்கலம் வட்டார மேற்பார்வையாளர் சுரேந்திரன், போகலூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சாரதா தேவி, தலைமை ஆசிரியைகள் உமா தேவி, அமுதா, பானுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.






