தமிழகம்

இரத்ததான முகாம்

39views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் 08.10.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் சிவகங்கை, வருவாய் கோட்டாட்சியர், விஜயகுமார் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.

நிகழ்வில் இளையான்குடி, வட்டாச்சியர், முருகன், இளையான்குடி, மண்டல துணை வட்டாச்சியர், முத்துராமலிங்கம், இளையான்குடி, வருவாய் ஆய்வாளர், சுரேஷ் குமார், கிராம நிர்வாக அலுவலர், பிரபாகரன் மற்றும் உதவியாளர் இலட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யும் மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தினர். நிகழ்வில் 59 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இரத்ததான பிரிவு, மேலாளர், சூசை மாணிக்கம், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி, முகம்மது பாத்திமா, கல்லூரி உன்னத் பாரத் அபியான், திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோருடன் கல்லூரி செஞ்சிலுவை சங்கம், ஒருங்கிணைப்பாளர் செய்யது யூசுப் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!