தமிழகம்

நிலக்கோட்டை தொகுதியில் வாக்குச்சாவடி(BLA2) முகவர்கள் கூட்டம்

440views
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் (BLA2) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஐ .பெரியசாமிBA. BGL., MLA., , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் BABL.,MLA. ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பா. வேலுச்சாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ. நாகராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெ.கரிகால பாண்டியன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டி மற்றும் மணிகண்டன், பேரூர் கழகச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் கிளைச் செயலாளர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் திருத்தம் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!