தமிழகம்

அம்மைய நாயக்கனூர் காவல்நிலையத்தில் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

172views
திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் உலக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
உலக பெண்கள் குற்ற தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம், ராகிங், போதை பொருளை பயண்படுத்துவதும் அதனால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி சிறப்பாக எடுத்துக் கூறி ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஆய்வாளர் இருக்கையில் அமர ஆசைப்பட்ட மாணவ மாணவிகளை தமது இருக்கையில் அமர வைத்து நாம் படிக்கும் படிப்பு தான் நமக்கு உயர்வை தரும் என்றும் சிறந்த முறையில் படித்தால் இதை விட பெரிய அளவிலான பதவிகள் சார்ந்த இருக்கையில் அமரலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திரளாக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!