தமிழகம்

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

58views
தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தீ தொண்டுநாள் அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு அதன் இறுதி நாளாக ஏப்ரல் 20 அன்று சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. இதில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி சௌராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமெரிக்கன் கல்லூரி வேலம்மாள் பொறியியல் கல்லூரி சார்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேசிய சாரணர் படை மாணவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் திறன்மிகு தீயணைப்பு வாகனங்கள், அவசர ஊர்திகள் ஆகியவை சேர்ந்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்த விழிப்புணர்வு பேரணி தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கி திருமங்கலம் தீயனைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் முடிவடைகிறது.

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் தீயனைப்பு துறையில் இருந்து சான்றிதழ் வழங்கப்படுகிறது மதுரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு மாவட்ட அலுவலர் வினோத் துணை அலுவலர் பாண்டி மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் பங்கு பெற்றனர்.
செய்தியாளர் : காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!