தமிழகம்

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் ராஜ்மோகனுக்கு சாதனையாளர் விருது

111views
பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஞாற்றுகிழமை நடைப்பெற்றது.
ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி ஹரிதாஸ் விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் திரைப்பட இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ், நடிகர் தயாரிப்பாளர் கலைமாமணி சரவணன், வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளையகட்டபொம்மன், அனைத்து மக்கள் சக்தி இயக்க நிறுவன தலைவர் கலைமான் டாக்டர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் திரைப்பட நடிகர் மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்க தலைவர் திரு.ராஜ்மோகனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விமலா ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.பீர்முகமது நன்றியுரை கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!