தமிழகம்

ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.

247views
ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (30 ஜூன் ) சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர உணவு விடுதி அரங்கத்தில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி SF அக்பர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் கலைமாமணி Dr. இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு மேல்நிலை கல்வித்துறையின் உருது அகாடமி துணைத்தலைவர் Dr முகமது நைமூர் ரஹ்மான், அன்னை வேளாங்கண்ணி செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர் Dr. K பிரேமா சேகர், வாராஹி அறக்கட்டளை நிறுவனர் Dr. கணபதி சுப்ரமணியன், ராணிப்பேட்டை திமுக கவுன்சிலர் மற்றும் உச்சநீதிமன்ற சட்ட ஆலோசகர் A. அனிஷா, சென்னை உயிர்நீதி மன்ற வழக்கறிஞர் நிர்மாஹ் அலி, ஆகியோர் கலந்துகொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

திரு மணிபாரதி, திரு அந்தோனிடேவிட், Dr.தமிழரசி சிவகுமார், நிர்மாஹ் அலி, சின்னத்திரை நட்சத்திரம் ரூபஸ்ரீ , பேராசிரியர் ஹசன் அப்துல்காதர் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சின்னத்திரை நட்சத்திரங்கள் மனிஷா ஜித், வைஷ்ணவி, ஊடகவியலாளர்கள் RJ நாகா, தேவி, R. பாண்டியன், மக்கள் தொடர்பாளர் செல்வரகு, பேராசிரியர் வாசிம் பாரி, எழுத்தாளர் நவரஞ்சனி ஸ்ரீதர் ஆகியோருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்ப்பட்டது.
பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை தலைவர் Dr SM ரஷ்மி ரூமி விழா வரவேற்புரை நிகழ்த்தி விருதுவழங்கும் விழாவை ஒருங்கிணைத்திருந்தார்.

விழாவில் ஏராளமான சின்னத்திரை, வெள்ளித்திரை கலைஞர்கள், எழுத்தளார்கள், பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!