தமிழகம்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளில் திரைப்பட நடிகர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு சாதனையாளர் விருது

57views
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திரைப்பட இசையமைப்பாளர் கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷ், திரைப்பட பின்னணி பாடகி, இயக்குனர் திருமதி ஷோபா சந்திரசேகர், தமிழக கேபிள் டிவி நல வாரியம் உறுப்பினர் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் நிர்வாக குழு உறுப்பினர் திரு. காயல்.ஆர்.எஸ்.இளவரசு , வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் இளைய கட்டபொம்மன், அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு.கலைமகன் டாக்டர் .எஸ்.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.

விழாவில் அனைத்து மக்கள் சக்தி இயக்க தலைவர், JRM அறக்கட்டளை உறுப்பினர், திரைப்பட நடிகர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு பல்வேறு பணிகளை பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கோவலன் எஸ்.பி.விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, எம்.பீர்முகமது நன்றியுரை வழங்கினார்.
ராமின் பாடும் வானப்பாடி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!