தமிழகம்

மலர்வனம் அன்னையர் தினசிறப்பு விருதுகள் விழா

44views
மலர்வனம் அன்னையர் தின சிறப்பு விருதுகள் வழங்கும் விழா மே 11, 2025 அன்று எச்சிசி அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கலைமாமணி முனைவர் திருமதி பார்வதி பாலசுப்ரமணியன், நிறுவனர், ஸ்ருதிலய வித்யாலயா இசை நடனப்பள்ளி, Dr. N. பஞ்சாபகேசன், நிறுவனர், சென்னை சாயி சங்கரா மேட்ரிமோனியல்ஸ், மற்றும் திரு.ஆர். சந்திரசேகர், நிர்வாக இயக்குனர், மணலி பெட்ரோகெமிகல்ஸ் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
நட்சத்திர அன்னை விருது: திருமதி ஸ்ரீவித்யா ஸ்ரீநிவாசன், முனைவர் திருமதி சித்ரா வெங்கடநாராயணன்; ஊக்கமளிக்கும் அன்னை விருது: திருமதி C.V.மோகனா, திருமதி பார்வதி கணேஷ்; பெருமைக்குரிய அன்னை விருது: திருமதி S. பரணி மகேஷ், முனைவர் D. சதாலட்சுமி; சிறந்த மகப்பேறு மருத்துவர் விருது: Dr. ஷ்ருதி பிரஷாந்த்; சிறந்த குழந்தை மருந்துவர் விருது: Dr. ஆர். மோனிஷா; பெண்மக்களைக் கொண்டாடும் தங்க அன்னை விருது: திருமதி K. ஜெயலட்சுமி;, சிறந்த அம்மம்மா விருது: திருமதி ராதா பலராமன், திருமதி S. லலிதா; சிறப்புக் குழந்தையை போற்றும் அன்னை விருது: திருமதி மேன்லின் ப்ளோராவுக்கும் வழங்கப்பட்டது.
ஏராளமான எழுத்தாளர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். மலர்வனம் ஆசிரியர் ராம்கி வரவேற்புரை ஆற்ற, நன்றியுரையை கவிஞர் பொ.வெ. இராஜகுமார் வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!