தமிழகம்

திரைப்பட நடிகர் திரு.ராஜ்மோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

205views
அமெரிக்காவின்”Southwest American University” யில் இருந்து சமூக சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் திரைப்பட நடிகர் திரு.ராஜ்மோகனுக்கு இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நவீன் பைன் ஆர்ட்ஸ் Dr.R.பன்னீர் செல்வம், குளோபல் அச்சீவர்ஸ் பௌண்டேஷன் சேர்மன் Dr.R.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தமிழ்நாடு நல்வாழ்வு துறை அமைச்சர் Dr.HV ஹண்டே, திரைப்பட வசனகர்த்தா கலைமாமணி Dr.லியாகத் அலிகான் திரைப்பட நடிகர் திரு.சின்னி ஜெயந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

‘தொடர்ந்து சமூகப் பணிகளில் முன்பை விட இன்னும் உத்வேகத்துடன் செயல்பட எனக்கு இது உந்து சக்தியாக இருக்கும் என தீர்க்கமாக நம்புகிறேன். இதற்காக எனக்கு வாய்ப்பளித்த, என்னோடு ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்’ என்று கௌரவ டாக்டர் பெற்ற திரு.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!