NaanMedia

NaanMedia

Editor
உலகம்

அபுதாபியில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 22-03-2025, சனிக்கிழமை மாலை அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர்....
தமிழகம்

வணிகவியல் நாள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக 20.03.2025 அன்று வணிகவியல் நாள் கொண்டாடப்பட்டது. துறைத்தலைவர் நைனா முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி, மேனாள் உதவி ஆட்சியர், மணிவேலன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பழைய மாணவர்கள் காமாட்சி மைந்தன் இராமமூர்த்தி, முருகானந்தம், இராஜேந்திரன்,...
சினிமா

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், மாரா டைப்பால் உயிரிழப்பு

பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் (48) இன்று மாலை மாராடைப்பால் மருத்துவமனையில் காலமானார். இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருந்த மனோஜ் காலமானது தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடல் சென்னை சேத்துபட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் https://youtube.com/shorts/KIycEANWeMU?si=0rMDNzlpDhxcjDML...
தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”ஷோ ரீல் ” நிகழ்ச்சி. ஞாயிறு பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஷோ ரீல் நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்களை அந்த படத்தின் குழுவினரை வைத்தே சுவாரசியமான நேர்க்காணலை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றார் . தொகுப்பாளர் பிருந்தா , கோலிவுடில் வார வாரம் வெளியாகும் புது படங்களின் குழுவினர் பகிரும் சுவாரசியமான தகவல்களை, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது....
தமிழகம்

ஆளுநரை சந்தித்த பிறகு நடிகர் பார்த்திபன் வெளியிட்டிருக்கும் அறிக்கை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.  உ வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுனருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும்...
சினிமா

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக...
தமிழகம்

வாணியம்பாடி அருகே அரசு பேரூந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் !!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் சென்றபோது கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தைநிறுத்தாமல் +2 பொதுதேர்வு எழுத கூடிய மாணவி பேரூந்தின் பின்னால் ஓடிச்சென்று பேரூந்தில் ஏறிய அவலம், கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில் மாணவி நின்று இருந்தபோதும் பேரூந்தை நிறுத்தவில்லை. இதன் வீடியோ வைரல் ஆன நிலையில் பேரூந்தின் ஓட்டுநர் முனிராஜை, நடத்துநர் அசோக் போக்குவரத்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர்தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்குஒளிபரப்பாகி வருகிறது.  உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிரு்ககும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு. இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோறும் நடுவர்களாக...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் கலையரங்கில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்வு முகாம் நாளில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்ற ஆட்சியர் சுப்புலெட்சுமி, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

முதல்வரிடம் நீர்வளத்துறை அமைச்சர் வாழ்த்து

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை 2025-26-ம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துபெற்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 4 5 976
Page 3 of 976

Right Click & View Source is disabled.

error: Content is protected !!