தமிழகம்

மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

102views
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பாஜகவின் சர்வாதிகார போக்கு மற்றும் மோடி அரசை கண்டித்தும் காங்கிரஸார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் வாசு வட்டார காங்கிரஸ் தலைவரும், ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வழக்கறிஞர் மகேந்திரா தலைமையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ‘சங்கை’ கணேசன், மாவட்ட ஓபிசி காங்கிரஸ் தலைவர் திருஞானம், நாகராஜன், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பேச்சாளர் எஸ்.ஆர். பால்துரை மோடி அரசை கண்டித்து உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் புளியங்குடி நகர்மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மாவட்ட செயலாளருமான சங்கரநாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், அம்மையப்பன், ராமச்சந்திரன், ‘கலர்ஸ்’ ஜாகிர் உசேன், பால்ராஜ், நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, ராஜ் என்ற அருணாச்சலம், பொதுச் செயலாளர் முகமது ஜவஹர்லால், செயலாளர்கள் முத்துராமசுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆசாரி, பொருளாளர் ‘பாண்டிச்சேரி’ சுப்பையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜான் அகஸ்டின் ராஜா, மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி செயலாளர் அந்தோணி ராஜ் @ ராஜா, மாவட்ட TCTU காங்கிரஸ் செயலாளர் சந்திரன், சிறப்பு அழைப்பாளர் மெல்கி, செயற்குழு உறுப்பினர்கள் தர்மமணி, ‘சிங்கப்பூர்’ வேலுச்சாமி,’பாக்யா’ பரமசிவன், ராமையா, சுடலை, D.மணிகண்டன், ‘ரோகிணி’ ராஜ், தாவீது நாடார், வேல்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், பாஜக மற்றும் மோடி அரசை கண்டித்தும் தலைவர்கள் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!