தமிழகம்

அதிமுக சார்பில் காட்பாடியில் அண்ணாதுரை பிறந்தநாள்: மாநகர செயலாளர் அப்பு மரியாதை

101views
வேலூர் அடுத்த காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் எதிரில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 115 பிறந்தநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வேலூர் மாநகர அதிமுக செயலாளர் எஸ்.ஆர். கே.அப்பு.  உடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  முன்னதாக செங்குட்டை பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அப்பு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!