தமிழகம்

சாத்தூர் அருகே, 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்

41views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை – விஜயகரிசல்குளம் பகுதியில் தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்தது. இதில் 3 ஆயிரத்து, 254 அரிய வகை பலங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து  2ம் கட்ட அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக மேலும் 3 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டு, 18 அகழாய்வு குழிகள் அளவீடு செய்யப்பட்டது. 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இந்தப் பகுதியில் சங்கினால் செய்யப்பட்ட அணிகலன்கள், கண்ணாடி பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளதால், 2ம் கட்ட அகழாய்வில் மேலும் பல பழமையான பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் கூறினர். வெம்பக்கோட்டை பகுதியில் கிடைக்க இருக்கும் பழமையான பொருட்களை கொண்டு, தமிழ்நாட்டின் தொன்மையை மேலும் அரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!