தமிழகம்

மதுரை தனியார் கல்லூரியில் ஏப்ரல் – 1ஐ ஏப்ரல் ஃபூல் என்பதை ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் முயற்சியில் 2023 மரக்கன்று நட்டு சாதனை

37views
ஏப்ரல் -1 ஐ முட்டாள் தினம் என கொண்டாடும் வேளையில் இன்று ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடும் முயற்சியாக மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் 2023 மரக்கன்றுகளை நடும் புதுவித முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் பசுமை நண்பர்கள் இயக்கம்,யங் இந்திய அமைப்பினர் மற்றும் மேற்கு ரோட்டரி இணைந்து இந்த பசுமை மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இன்று மாணவ, மாணவிகள் அனைவருக்கும் விதவிதமான 2023 மரக்கன்றுகளை வழங்கினர். அதோடு கல்லூரி வளாகம் முழுவதும் 25 வகையான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ராமநாதன், செயலாளர்.பொன்குமார், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறும் போது,  ஏப்ரல் – 1 ஐ முட்டாள் தினம் ஏப்ரல் ஃபூல் என்பதை ஏப்ரல் கூல் என சொல்லும் அளவில் பசுமை மரங்களை நட்டு வளர்த்து பசுமையாக்க முயற்சி எடுத்திருப்பதாகவும், இந்த முயற்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முதன் முதலாக அமெரிக்கன் கல்லூரியில் ஏப்ரல்-1 ஐ ஏப்ரல் கூல் என்று சொல்லும் முயற்சியில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கியும் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருவதாக கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!