தமிழகம்

உத்திரகோசமங்கை அரசு பள்ளி மாணவியருக்கு அரசு டாக்டர் பாராட்டு

98views
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடந்தது. இதில், உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதலிடம் பிடித் னர். இதன் மூலம் நாமக்கல்லில் டிச.5ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மனோஜ் குமார் பாராட்டு சான்று வழங்கினார். தனது சொந்த நிதியிலிருந்து மாநில அளவில் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவியர் 20 பேருக்கு சீருடை வழங்கினார். தலைமை ஆசிரியர் ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!