கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்
196views
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:
நவீன உலகில் பெண்கள் உடல் நலம் குறித்த அதிக கவனம் இல்லாமல் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பினால் வரும் மரண விகிதம் அதிகமாக உள்ளது. கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. கர்ப்பை வாய் புற்றுநோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம்.
கருப்பை புற்றுநோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் 25% பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்க்கு முன் ஏற்படலாம்.
பிறப்புறுப்பு இதழ் (வால்வார்) புற்றுநோய் புற்றுநோய் என்பது 0.6% பெண்களுக்கு ஏற்படும் அரிதான புற்றுநோயாகும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4% பெண்களுக்கு வரும் புற்றுநோய். இது பாலியல் ரீதியாக பரவும் வைரஸ். ஒரு பெண்ணுக்கு வெளிப்புற பிறப்புறுப்பில் தொடர்ந்து அரிப்பு, வலி, புண், மருக்கள், புண் அல்லது கட்டியுடன் கூடிய வெள்ளைப்படுதல் அல்லது ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் மருத்துவர்களை அனுக வேண்டும்.மகளிர் மற்றும் மகப்பேறு நோய்களை நிர்வகிப்பதில் அறுவை சிகிச்சை தலையீடுகளுக்கு தலையீட்டு கதிரியக்க செயல்முறைகள் ஒரு சிறந்த மாற்றாகும். வழக்கமான அறுவை சிகிச்சையை விட எம்போலைசேஷன் சிகிச்சையில் குறைவான சிக்கல்களே உள்ளது என்றனர்.





