அறிவிப்பு

கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ கவிதைப்போட்டி – 2024

377views
’இனிய உதயம்’ இதழ் – கவிஞர் கவிநிலா மோகன் இணைந்து நடத்தும் கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ கவிதைப்போட்டி – 2024
மொத்தப் பரிசு ரூ.15 ஆயிரம்

கவிநிலா மோகன்
ஜப்பானில் பிறந்து, உலகெங்கும் பரவி, இன்றைக்கு தமிழ் நிலத்தில் செழித்து வளர்ந்து நிற்கும் மூவரி குறுங்கவிதை ஹைக்கூ.
மகாகவி பாரதி தமிழில் அறிமுகம் செய்து ஒரு நூற்றாண்டு (1916-2016) கடந்தோடிவிட்டது. கவிக்கோ அப்துல்ரகுமான் தமிழின் நேரடியான முதல் ஹைக்கூ கவிதைகளை எழுதி (1972) அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்று கவிதை எழுதும் கவிஞர்களுக்கெல்லாம் பிடித்த செல்லக் கவிதையாக வலம்வரும் ஹைக்கூவைத் தமிழில் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் கவிஞர் மித்ரா.
தமிழ் ஹைக்கூ கவிதைகளில் தனித்துவத்துடன் விளங்கிய கவிஞர் மித்ராவின் நான்காமாண்டு நினைவு தினம் 2024 அக்டோபர் 4. அதனை முன்னிட்டு நடைபெறும் ஹைக்கூ கவிதைப்போட்டில் பங்கேற்க உலகத் தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். போட்டியின் நடுவராக இருந்து சிறந்த கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பினை கவிஞர் மு.முருகேஷ் ஏற்றுள்ளார்.

கவிஞர் மித்ரா
முதல் பரிசு ரூ.5 ஆயிரம் – இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் – மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் – ஆறுதல் பரிசு பெறும் 10 கவிஞர்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள நூல் பரிசு
0 ஒருவர் மூன்று ஹைக்கூ கவிதைகள் மட்டுமே அனுப்ப
வேண்டும். தலைப்புகள் வேண்டாம்.
0 தாங்கள் விரும்பும் கருப்பொருளில் எழுதலாம்.
0 கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 2024 அக்டோபர் 31
0 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: haiku.mumu@gmail.com
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!