தமிழகம்

விருதுநகர் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் உடலுக்கு, சிவகாசி மேயர், யூனியன் சேர்மன் மாலை அணிவித்து அஞ்சலி

151views
விருதுநகர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடல்நல பாதிப்பால் திடீரென்று இறந்தார். அதிமுக கட்சியைச் சேர்ந்த இவருக்கு, கட்சி சார்பில்லாமல் அனைத்துக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி யூனியன் சேர்மன் முத்துலட்சுமி விவேகன்ராஜ் மற்றும் சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், சிவகாசி ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வடபட்டியில், மறைந்த ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான தோட்டத்தில், அவரது உடல் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!