தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டை செக்போஸ்ட்டில் கார் மோதி பெண் மான் காயம் 2 நாட்கள் சிகிச்சை அளிக்காமல் வனத்துறை மெத்தனம்

158views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியாண்பேட்டை செக்போஸ்டில் (தமிழக-ஆந்திரா எல்லை) பகுதி சிறிய காடுகள் பகுதி, அந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டு இருமாநிலங்களுக்கிடையே சாலை போக்குவரத்து உள்ளது.  கடந்த 8 – ம் தேதி சனிக்கிழமை இரவு கருவுற்ற நிலையில் உள்ள பெண்மான் ஒன்று வழித் தவறி கிறிஸ்தியாண் பேட்டை செக்போஸ்ட் அருகில் கலால் பிரிவு சோதனை சாவடி பக்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியதில் அதற்கு வலதுகாலில் லேசாக அடிப்பட்டு அங்கே விழுந்தது.

அந்த பகுதியில் உள்ள டீகடையில் இருந்தவர்கள் அருகில் பணியில் உள்ளவனத்துறை ஊழியருக்கு (அங்கு வனத்துறை செக் போஸ்ட் உள்ளது)  தகவல் தெரிவிக்கப்பட்டு பிறகு அங்குள்ள வனத்துறை செக்போஸ்ட் பழைய ஓய்வு அறையில் இரவு பாதுகாக்கப்பட்டது.  இதுகுறித்து வனத்துறை மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு பயந்த நிலையில் இருந்த கருவுற்ற பெண் மானுக்கு புற்கள் போன்ற உணவை ஊழியர் வழங்கிவந்தனர்.  சனிக்கிழமை இரவு, ஞாயிறு பகல் மற்றும் இரவு வரை வனத்துறைக்கு உதவி செய்யும் மருத்துவர் வரவே இல்லை.

திங்கள்கிழமை 10-ம் தேதி காலை 10.30 மணியளவில் காட்பாடி பகுதியில் இருந்து ஒரு பெண் மருத்துவர் வந்து காலுக்கு சிகிச்சை அளித்தார். அங்கு பெண் வனத்துறை அதிகாரி மற்றும் வனத்துறையினர் இருந்தனர்.  கர்ப்பிணியாக இருந்த அந்த மானுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி செய்யவில்லை.  பின்பு சிகிச்சை அளிக்கப்பட்டு திங்கள்கிழமை மாலையில் வேலுர் அருகில் உள்ள அமிர்தி காட்டில் வனத்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.  அதன் கால்வலி சரியான பிறகு காப்பு காட்டில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.  வனத்துறையினரின் மெத்தன போக்கால் காயம் அடைந்த கருவுற்ற பெண்மான் 2 நாட்களாக அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!