செக்கானூரணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிமேடை இடிப்பு கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
227views
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ஊரின் மையப்பகுதியில் தேவர் சிலை அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொடிமேடை நேற்று இரவு அமைக்கப்பட்டது இன்று மதியம்.மர்ம நபர்கள் அதனை தகர்த்தனர். தகவல் அறிந்துஅங்கு திரண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த சொக்கனூரரணி காவல் ஆய்வாளர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அது கொடி நடையை பிடித்தவர்களை கண்டுபிடித்து மீண்டும் அதே இடத்தில் கட்டித் தர சொல்கிறேன் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபடமுயன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இன்ஸ்பெக்டரின் சமரசத்தை ஏற்று கலைந்து சென்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி மேடை இடிக்கப்பட்டதால் செக்கானூரணி பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்






