தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள், மர்ம நோயால் அழியும் நிலை – கத்தரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பு.

293views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கத்தரி , வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் ,  கடந்த சில மாதங்களாக மிளகாய் செடியில் மர்ம நோய் தாக்கி செடி நாளடைவில் கருகி , அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தென்பழஞ்சி மாவிலிப்பட்டி , கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200 ஏக்கர் பரப்பளவில் பயரிடப்பட்ட மிளகாய்ச் செடிகளுக்கு மர்ம நோய் தாக்கி வருவதால் , தாங்கள் முதலீடு செய்து விவசாயம் செய்த மிளகாய் செடிகள் வீணாகி கருகி வருவதை எண்ணி, மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள், எதற்காக இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது ? அழிவுக்கு காரணம் விதையா? உரமா? என ஆய்வு நடத்தி , உடனடியாக மிளகாய் சாகுபடி வியாபாரிகளை காக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில்,  இதே போல் கத்தரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் மர்ம நோய் தாக்கி கத்தரிக்காய் பெருமளவில் பூச்சி தாக்கி, கத்தரிகாய் அனைத்தும் ஓட்டை ஓட்டையாக பயன்படுத்த முடியாத நிலையில், செடியிலேயே அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!