தமிழகம்

ராணிப்பேட்டை மேம்பாலத்தில் 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதி நண்பர் 3 பேர் பரிதாபம்

209views
ராணிப்பேட்டை மாவட்டம் காரை காட்டன் பஜார் தெருவை சேர்ந்த தினேஷ் (20), ஆர்க்காடு காந்திநகர் பாலமுருகன்(19), வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ஷாஜகான் (26) இவர்கள் நண்பர்கள். 3 பேரும் நேற்று அதிகாலை 2 சக்கர வாகனத்தில் நவல்பூரிலிருந்து ராணிப்பேட்டை காரை மேம்பாலத்தில் ஒன்றாக சென்றுகொண்டு இருந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார்தாறுமாறாக வந்து பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலமுருகனை வேலூர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்துவருகின்றனர். இச்சம்பவம் ராணிப்பேட்டை மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!