தமிழகம்

திருவள்ளுவர் அருகே டேங்கர் சரக்கு ரயில் கவிழ்ந்து பெரும் தீ விபத்து18 டேங்கர் நாசம், உயிர்சேதம் தவிர்ப்பு, அரக்கோணம், காட்பாடி இரு மார்கமாக ரயில்சேவை பாதிப்பு

113views
சென்னை மணலி புதூரிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 48 – டேங்கர்களில் குரூட் ஆயில் (பெட்ரோலிய பொருள்) ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் பெங்களூரு புறப்பட்டது. சுமார் விடியற்காலை சுமார் 5.20 மணிக்கு திருவள்ளுவர் ரயில்நிலைத்தை விட்டு கடந்து சுமார் 2 கி.மீ. கடந்த ஏகாட்டூர் ரயில்நிலையத்திற்கு முன்பு வரதராஜபுரம் என்ற இடத்தில் சென்றபோது 3 டேங்கர்கள் ரயில் தண்டவாளத்தைவிட்டு இறங்கியதால் பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக ரயில்வேகன் டிரைவர் அருகில் உள்ள ரயில்நிலையத்திற்கு உடனடியாக வாக்கி-டாக்கில் தகவல் தெரிவித்தார். தடம்புரண்ட டேங்கர் திடீரென தீ பிடித்து எறிந்தது. படிப்படியாக18 டேங்கர் எரிந்தன. அருகில் உள்ள தீயணைப்பு துறையினர் 100-க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. அரக்கோணத்திலிருந்து பேரீடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர், ஆவடி ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மத்தியம் வரை போராடி தீயை அனைத்து மற்ற டேங்கர் பெட்டிகளை சுழற்றி பாதுகாப்பாக ஆவடி- யார்டுக்கு அனுப்பி வைத்தனர். 30 டேங்கர்கள் தப்பியது, 18 டேங்கர்கள் எரிந்து சேதமடைந்தன. உயிர்சேதம் ஏதும் இல்லை என ரயில்வே துறைசார்பில் தெரிவிக்கப்பட்டது.

டேங்கரிலிருந்து எரிந்த தீ கரும்புகையாக மாறி வரதராஜபுரம், ஏகாட்டூர் ,திருவள்ளுவர் பகுதியில் பரவியது. மாவட்ட சம்மந்தப்பட்ட 2கி.மீட்டர் தொலைவில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டது.நேற்று காலை முதல் பெங்களூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் பகுதியில் போக்குவரத்து 2 வழிகளிலும் ரத்து செய்யப்பட்டது. பெங்களுர், கோவை பகுதியிலிருந்து வந்த பயணிகள் காட்பாடி. அரக்கோணத்திலிருந்து பயணிகள் தமிழக அரசு பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டன. எரிந்த டேங்கர்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர் ஈடுப்பட்டு வருகின்றன. நாளை திங்கள்கிழமை காலை முதல் மின்சார ரயில் மற்றும் அனைத்து ரயில்களும் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!