தமிழகம்

மதுரையில் இரு வேறு விபத்துகளில் பைக்கில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் தலை நசுங்கி பலி மற்றொரு விபத்தில் முதியவர் மீது அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி பலி

84views
மதுரை மாநகர் கரிசல்குளம் ராம் முனி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (எ) ராஜன்(35) தனது மனைவி ரேணுகாதேவியுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இவர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் முகவராக பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் இன்று காலை காளவாசல் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். கூடல்நகர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது முன்னால் சென்ற நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு சொந்தமான ஒப்பந்த லாரி ரேசன் பொருட்களை ஏற்றிவந்தபோது திடிரென பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜன் தலைக்கவசம் அணிந்திருந்த்நிலையிலும் தலைநசுங்கிய நிலையில் உயிரழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோன்று மற்றொரு விபத்தில் மதுரை திருப்பரங்குன்றம் சாலை மதுரா கல்லூரி பாலம் இறக்கத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மாடக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டிரைவர் ராமர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பாலம் இறக்கத்தில் வரும் பொழுது இப்பொழுது வந்த மதுரை ஜீவா நகர் மீனாம்பிகை ஐந்தாவது தெருவை சேர்ந்த ராமர் வயது 60 ஹெல்மெட் அணிந்திருந்தார் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் இறக்கத்தில் வரும் பொழுது திடீரென நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தின் அடியில் விழுந்தார்.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை டவுன் போக்குவரத்து போலீசார் சார்பு ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  சம்பவம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் இவ்வபத்தினால் திருப்பரங்குன்றம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர் ஒரே நாளில் காலையில் இளைஞர் மற்றும் மதியம் முதியவர் இருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இவர்கள் அணிந்திருந்த ஐ எஸ் ஐ முத்திரை ஹெல்மெட் தரமற்ற இருந்ததாக தெரிய வருகிறது  உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!