தமிழகம்

சோழவந்தான் பிரளய நாத சிவாலயத்தில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

96views
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நடராஜர் சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகருக்கு பால் தயிர் வெண்ணெய் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. ரவிச்சந்திர பட்டர் பரசுராமன் சிவாச்சாரியார் ஐயப்பன் பூஜைகள் செய்தனர். பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா எம் வி.எம் குழும நிர்வாகி வள்ளி மயில் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் எம் மருது பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!