தமிழகம்

அமிஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

10views
அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட க் குழுவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
 டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை கிண்டலாகப் பேசி இழிவு படுத்திய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். ஒன்றியப் பிரதமர் மோடி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தை ஜனநாயக ரீதியில் செயல்பட நாடாளுமன்ற சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய்யான வழக்குகள் புனைவதை தடுத்து நிறுத்த வேண்டும்…
உள்ளிட்ட கோரிக்கையினை முன்வைத்து முழக்கமிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கைத்தறி மாநில சம்மேளனத் தலைவர் எஸ் பி இ ராதா, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கே ஜீவா, ஜி லோகநாதன், சி செல்வராஜ், கே ஆர் சுப்பிரமணியன், குருசாமி,ஜீவானந்தம், சிவகுமார்,ஹரிகரன், மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ் கோவிந்தன் எம் பி ருக்மாங்கதன் வி.என். கணேசன் மூர்த்தி வி ஆர் நாகநாதன் எம் கோட்டைச்சாமி, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!