செய்திகள்தமிழகம்

சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு எனக் கூறி போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்

143views

மோசடி நபர்கள் சிலர், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவிமற்றும் சிலிண்டரின் எடை அழுத் தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளை பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றுஎண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

ரப்பர் குழாய் பரிசோதனை

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள ஆரஞ்சு நிற ரப்பர் குழாயை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து, மாற்ற வேண்டும்.

அதேபோல, ரெகுலேட்டர் மற்றும் காஸ் அடுப்பு ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணியை வாடிக்கையாளர்களின் ஏஜென்ட்கள் மேற்கொள்வார்கள். அவர்கள் இப்பணியை மேற்கொள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு முன், அவர்கள் வரும் விவரத்தை சம்பந்தப்பட்டஏஜென்சிகள், வாடிக்கையாளர் களுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்து விடும்.

இவ்வாறு பரிசோதனைக்கு வரும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.300 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். கூடுதல் தொகையை அளிக்க வேண்டாம். அதேபோல, வரும் ஊழியர், சம்பந்தப்பட்ட ஏஜென்சி அனுப்பும் ஊழியர்தானா அல்லது மோசடி நபர்களா என்பதை, ஏஜென்சிக்கு போன் செய்து வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதிக பணம் வசூல்

மேலும், சில மோசடி நபர்கள்சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தைக் கண்டறிவதற்கான கருவியைப் பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளைப் பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பியும் வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!