செய்திகள்தமிழகம்

கோவையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா் அறிவிப்பு

52views

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோன பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மீன், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் மால்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பொருந்தும். பொள்ளாச்சி மாட்டுச் சந்தை புதன்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் இயங்க தடைவிதிக்கப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வணிகா் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!