ஆந்திரப் பிரதேச அரசுக்கு எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி)ரூ.215 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவணைத் தொகை, கடன் தொகையை செலுத்துவதில் தாமதம் செய்யும் கடனாளிகளுக்கு வங்கிகள் அபராத வட்டி விதிப்பது வழக்கம். அபராத வட்டித் தொகைக்கு வங்கிகள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால், எஸ்பிஐ அபராத வட்டிக்கு ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசுக்கு எஸ்பிஐ ரூ.215.11 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று வரி துணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆந்திர அரசுக்கு வழங்க வரி எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்பிஐ ரூ.215.11 கோடி ஜிஎஸ்டியை ஆந்திர அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.