புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – மேலும் நாளை முதல் திரையங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக
# கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இரவு 9 மணி வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
# அதேபோல் மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50% பேருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
# 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
# கொரோனா தடுப்பு விதிகளுடன் சுற்றுலா தலங்களில் 50% பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.