செய்திகள்தமிழகம்

“தனியார் பள்ளிகள் இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்” : நீதிமன்றம் அதிரடி!!

63views

நடப்புகல்வியாண்டில்தனியார் பள்ளிகள்  85 சதவீதகல்விகட்டணத்தைவசூலித்துக்கொள்ளசென்னைஉயர்நீதிமன்றம்அனுமதிவழங்கியுள்ளது.

மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பு கல்வியாண்டில் தனியார்கள் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார் .

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 6 தவணைகளாக கட்டணத்தை வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

கட்டணம் செலுத்தாதை காரணம் காட்டி , மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கவோ , ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவோ தடை விதிக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதி , கட்டணம் செலுத்தாத காரணத்தால் , மாணவர்களை நீக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!