செய்திகள்தொழில்நுட்பம்

சாலையில் செல்லும்போதே.. சார்ஜ் ஆகும் புதிய தொழிநுட்பம்.. அதிரடி திட்டம்.!!!

103views

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மின்சார வாகனங்களை சாலையில் செல்லும் போதே சார்ஜ் செய்யும் அதிரடி திட்டம் ஒன்றை இந்தியானா போக்குவரத்துக் கழகமும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்படுத்த உள்ளனர். ஸ்மார்ட்போனில் உள்ள வயர்லெஸ் சார்ஜ் வசதி போல சாலையில் ஒன்றை பொருத்துவதன் மூலம் அதிலிருந்து வாகனங்கள் சாலையில் செல்லும்போது சார்ஜ் செய்ய இயலும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!