452
கவிதை வானில் கவி மன்றத்தின் 208 ஆம் நிகழ்வாக காமராசரின் 118 ஆம் பிறந்த நாளை கொண்டாட நினைத்தோம்.
கனடா ச ர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் தலைவர் ராஜி பற்றார்சன் அவர்களுடன் இணைந்து நடத்திய India pride book of Records உலக சாதனை நிகழ்வு இணையம் வழி பல்சுவை அரங்கமாக ஐந்து நாட்கள் நடைபெற்றது.
51 மணி நேரம் தொடர்ந்து நடத்த தீர்மாணித்து ஆரம்பித்த நிகழ்வு மாணவர்களின் படையெடுப்பில் 118 மணி நேரத்தில் வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டியிருந்தது.
நிகழ்ச்சியை வடிவமைத்த போதே 20 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன..தங்கக் கல்யாணி,ருக்மணி இருவரும் இணைய இணைப்பை கவணித்துக்கொள்ள ஐந்து நாட்களும் தங்களை தனிமைபடுத்திக்கொண்டனர் என்றேச் சொல்ல வேண்டும்..இறுதி நாளன்று இருவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் ஆனது.
அந்த அளவிற்கு இருவரும் சாப்பிடாமல்…தூங்காமல் முழுமையாக இணைத்துக் கொண்டனர்.
சுகந்தி டெய்சி ராணி…ஸ்ரீரெங்கன்…காயத்ரி சுந்தர்…அனிதா…ரா.சரஸ்வதி..த.சித்ரா.கா. சரஸ்வதி…மு.சாலம்மாள்…கி.காயத்ரி…லலித்தாம்பிகை…ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றுவதால் திறமையுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தினமும் பயிற்சி அளித்து தயார் படுத்தினர்.
ரா.பிரசாத்…ஜான் கென்னடி…கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைத்து பட்டி மன்றங்களை தயாரித்தனர்.வை.கருணாகரன் என்ற கல்லூரி மாணவர் பங்கு பெற உள்ளே நுழைந்தவர் ஒருங்கிணைப்பாளராக இணைந்து அரசு பள்ளி மாணவர்கள் 160 பேரையும் 20ஆசிரியர்களையும் வழி நடத்தி அசத்தினார்.சேலத்தில் உள்ள மிகச்சிறிய கிராமத்திற்குள் ஒற்றை மடிக்கணிணியுடன் ஒற்றை மணிதராக பல்சுவை நிகழ்வை மதியம் 12. மணியிலிருந்து இரவு 12 மணி வரை நடத்தி எல்லோரையும் தன்வயப்படுத்தினார்.
முனைவர்.ஆ.முகமது முகைதீன்…Dr.வனஜா வைத்திய நாதன்..Rtn.வைத்தியநாதன்..முனைவர்.ரா.ராஜேந்திரன் ஆகியோரின் வாழ்த்துரையுடன் நிகழ்வு ஆரம்பமாக மாணவர்கள் பேசி..பாடி…நடனமாடி…ஓவியம் வரைந்து…என காமராசருக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தனர்.தான் தெளித்த விதைகள் விருட்சமாகி தன்னைப்பற்றி பேசுவதை அந்த மனிதர் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது கேட்டவர் அத்தனை பேருக்கும்..
இவர்கள் அனைவரும் கனடா ராஜியுடன் இணைந்து வழி நடத்திக் கொண்டிருக்க..இரவு முழுவதும் 200ற்கும் மேற்பட்டவர்களை இணைத்து பலகட்ட நிகழ்வுகளை அள்ளி அள்ளி வழங்கினர்..விடிந்த பின் அவர்களிடம் போராடித்தான் எங்களுக்கான நேரத்தை வாங்க வேண்டியிருந்தது..எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அழகை எங்களுக்கு அதிகாலை நேரத்தில் வழங்கிச்செல்லும் போது உற்சாகம் பற்றிக் கொள்ளும்..
அவரவர் இடத்தில் இருந்து கொண்டே இணையத்தில் இணைந்து இத்தனை பெரிய நிகழ்வை செய்ய முடியும் என்று ஒரு வருடத்திற்கு முன்பு வரை யோசனை செய்திருக்க முடியாது.சிங்கப்பூர்..கனடா…துபாய்…அபுதாபி…ஷார்ஜா…அமெரிக்கா…ஆஸ்திரேலியா..இங்கிலாந்து..குவைத்…பிரான்ஸ்…இலங்கை…ஓமன்..டொக்கியோ…பிரிட்டன்..நெதர்லாந்து…ஸ்விட்சர்லாந்து…நார்வே..போன்ற20 ற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கலந்து கொண்டு காமராசர் பற்றி பேசியது அழகாக மட்டுமல்ல..அற்புதமாகவும் இருந்தது.
வாழத் தெரியாதவர் என்று கருதப்பட்ட ஒரு மனிதர் இத்தனை ஆண்டு காலம் கடத்தும் இத்தனை மனிதர்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறார் என்பது சாதாரண விசயமா என்ன ?
துவக்க விழா புதுச்சேரி ஜோதி கண் பராமரிப்பு மையத்தில் நடைபெற்றது.எனது ஆத்மார்த்தமான தோழி Dr.வனஜா வைத்தியநாதன் கவிதை வானில் நிகழ்வுகளுக்கு எப்போதும் இடம் தருவதுடன் நிச்சயமாய் உடன் இருந்து நிகழ்வை உச்சம் அடைய வைத்துவிடும் அழகான மனதுக்கு சொந்தக்காரர்.கூடவே இணையும் வைத்தியநாதன் அவர்களும் எல்லா நிகழ்வுகளிலும் முன்னின்று செய்யும் அழகை இன்றெல்லாம் சொல்லலாம்.
தன்னம்பிக்கை கலைக்குழு தலைவர்.எலிசபெத் ராணி தமது குழுவினருடன் வருகை தந்து பறை இசையுடன் ஒயிலாட்டம் ஆடி வந்திருந்த அனைரையும் ஆடவைத்து நிகழ்ச்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார்..
கலைமாமணியும் நெருங்கிய தோழியுமான சரஸ்வதி முரளி மொழி வாழ்த்து பாடியதைக் கேட்டவர்கள் அவரது குரலில் மயங்கி விரும்பி கேட்ட பாடல் நேரமாக மாற்றி வைக்க..அவர்களை தட்டி எழுப்பி காமராசர் நிகழ்விற்கு இழுத்து வந்தோம்.
விழுப்புரத்திலிருந்து அறிவழகன் என்ற பறைஇசைக்கலைஞர் தமது குழுவினருடன் சும்மா ஒரு மணி நேரத்திற்கு சிலம்பாட்டம்…பறை…என்று பாரம்பரியக் கலைகளை வாரி வழங்கினார்.
அதே நேரம் நிகழ்வும் தொடங்கி விட இரண்டு தளங்களில் இரண்டு நிகழ்வுகளும் நடந்தேறியது.
புதுச்சேரி முதலமைச்சர்..சட்டப்பேரவைத் தலைவர்..மாண்புமிகு அமைச்சர்கள்…சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நேரில் வர இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்து இணையவழி வாழ்த்து தெரிவித்தனர்.
-
கலா விசு
add a comment