செய்திகள்தமிழகம்

தெலங்கானாவில் இருந்து ரயிலில் நெல்லைக்கு 2600 டன் ரேஷன் அரிசி வருகை

74views

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் நெல்லைக்கு 2600 டன் ரேஷன் அரிசி வந்து சேர்ந்தது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய தொகுப்பில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் டன் கணக்கில் வாரம்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தெலுங்கானா மாநிலம் திட்டப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 2,600 டன் அரிசி மூடைகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.

மொத்தம் 42 ரயில் பெட்டிகளில் 52, 917 மூடைகளில் வந்த ரேஷன் அரிசியை ரயிலில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் பின்னர் லாரிகளில் ஏற்றி நெல்லைபுரம் நுகர்பொருள் சேமிப்பு கிட்டங்கி நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவை அங்கிருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!