இந்தியாசெய்திகள்

செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட புகார் ஆதாரமற்றது: மத்திய அமைச்சர் விளக்கம்

52views

முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டு செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய அரசின் மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், இது தற்செயலானது அல்ல என்றும் தெரிவித்தார்.

இது ஆதரமற்ற குற்றச்சாட்டு என்று கூறிய மத்திய அமைச்சர், இந்திய ஜனநாயகத்துக்கும், அதன் அமைப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சி என்றும் விளக்கம் அளித்தார். செல்போன்களை ஆய்வு செய்யாமல் இதுகுறித்து முடிவுக்கு வர முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!