இந்தியாசெய்திகள்

கேரள ஆளுநர் திடீர் உண்ணாவிரதம்., ஒன்று சேரும் பெண்கள்.!

127views

வரதட்சணைக்கு எதிராக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

வரதட்சணைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பிற்காகவும் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கேரள மாநிலத்தில் வரதட்சணைக் கேட்டு, கொடுமைப்படுத்தி கொலை, கொடுமை தாங்காமல் தற்கொலை செய்யும் சம்பவங்கள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. அண்மையில், இதுபோன்ற 2 சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் ‘நாங்கள் வரதட்சணை தரமாட்டோம்’ என்று தங்களது எதிர்ப்பை எழுப்பினர். மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஊடகங்கள், பொதுமக்கள் பலரும் இந்த வரதட்சணை கொடுப்பது வாங்குவது குறித்து வாதங்கள், விவாதங்கள் அதிகம் பேசத் தொடங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் வரதட்சணைக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வரதட்சணைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பிற்காகவும் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

திருமணத்தின்போது வரதட்சணை தரவும், பெறவும் எதிர்ப்பு தெரிவித்து காந்தி ஸ்மாரக நிதி அமைப்பு உண்ணாவிரதம் இருந்து வருகிறது. காந்தி ஸ்மாரக நிதி அமைப்பின் கோரிக்கையை ஏற்று இன்று, திருவனந்தபுரத்திலுள்ள ராஜ்பவனில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!