கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு: தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து என அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிப்பதை தவிர்த்ததால் மீண்டும் அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதே போல், இந்தியாவிலும் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து; மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படும். போதுமான ஆவணங்கள் கையில் வைக்கப்பட வேண்டும். கோவிட் வழக்குகள் இன்னும் மாநிலத்தில் குறைந்து வருகின்றன.
தடுப்பூசி போடுவதன் மூலமும், சமூக தூரத்தை வைத்திருப்பதன் மூலமும், முக்கவசம் அணிவதன் மூலமும் இந்த தொற்றுநோயை நாம் விரைவில் அழிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.