இந்தியாசெய்திகள்

இம்மாதம் 10 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி

68views

ஜூன் மாதத்தில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு சீரம் இந்தியா நிறுவன இயக்குநா் பிரகாஷ்குமாா் சிங் எழுதிய கடிதத்தில், 6.5 கோடியாக உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் உற்பத்தி ஜூன் மாதம் 9 கோடி முதல் 10 கோடியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா். கரோனா தொற்றால் பல்வேறு சவால்களுக்கு இடையிலும் தடுப்பூசி உற்பத்திப் பணியில் தங்கள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (டிசிஜிஐ) சீரம் நிறுவனம் அளித்துள்ள தகவலில், ஜூன் மாதத்தில் இதுவரை 45 தொகுதிகளாக 10.80 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!