2020 ஆம் ஆண்டிற்கான ஸ்மார்ட் சிட்டி விருதுகள் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது, இதில் இந்தூர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் சூரத் (குஜராத்) ஆகியவை இணைந்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக விருதை வென்றன. மாநில அளவில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், அதை அடுத்து மத்தியப் பிரதேசமும், தமிழ்நாடும் உள்ளன.
ஸ்மார்ட் சிட்டி விருதுகள் சமூக அம்சங்கள், ஆளுமை, கலாச்சாரம், நகர்ப்புற சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாட்டு, நீர், நகர்ப்புற போக்குவரத்து ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாக மத்திய வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூரத், இந்தூர், அகமதாபாத், புனே, விஜயவாடா, ராஜ்கோட், விசாகப்பட்டினம், பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் வதோதரா ஆகியோருக்கு காலநிலை அம்சங்களின் கீழ் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களின் மதிப்பீட்டில் 4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டது.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் விருதைப் பெற்றது, இந்தூர் “புதுமையான கருத்துக்கான விருதை” வென்றது.
அகமதாபாத் ‘ஸ்மார்ட் சிட்டி தலைமை விருது’ வென்ரது, வாரணாசி மற்றும் ராஞ்சி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பெற்றன.
ஆளுகை அம்சத்தில்-வதோதரா, தானே மற்றும் புவனேஸ்வர் ஆகியவை நாட்டின் முதல் -3 நகரங்களாக உள்ள்ன.
வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வென்ற ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல்:
- சமூக அம்சங்கள்
திருப்பதி: நகராட்சி பள்ளிகளுக்கான சுகாதார வசதிகள்
புவனேஷ்வர்: சமூக அளவில் ஸமர்ச்ட் சிட்டியான புவனேஸ்வர்
துமகுரு: டிஜிட்டல் நூலக தீர்வு
- ஆளுகை
வதோதரா: GIS
தானே: டிஜி தானே
புவனேஸ்வர்: ME செயலி
- கலாச்சாரம்
இந்தூர்: பாரம்பரிய பாதுகாப்பு
சண்டிகர்: கேபிடல் காம்ப்ளக்ஸ், பாரம்பரிய திட்டம்
குவாலியர்: டிஜிட்டல் மியூசியம்
- நகர்ப்புற சூழல்
போபால்: புதுபிக்கவல்ல ஆற்றல்
சென்னை: நீர்நிலைகளை புதுபித்து சீரமைத்தல்
திருப்பதி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி
- சுகாதாரம்
திருப்பதி: பயோரெமீடியேஷன் & பயோ மைனிங்
இந்தூர்: நகராட்சி கழிவு மேலாண்மை அமைப்பு
சூரத்: சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் மூலம் சுற்று சூழல் பாதுகாப்பு
- பொருளாதாரம்
இந்தூர்: கார்பன் கடன் நிதி அமைப்பு
திருப்பதி: டிசைன் ஸ்டுடியோ மூலம் உள்ளூர் அடையாளத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துதல்
ஆக்ரா: மைக்ரோ திறன் மேம்பாட்டு மையம்
- சுற்றுச்சூழலை மேம்படுத்துதல்
இந்தூர்: சப்பன் டுகான் (Chappan Dukan)
சூரத்: கால்வாய் நடைபாதை
- நீர்
டெஹ்ராடூன்: ஸ்மார்ட் வாட்டர் மீட்டரிங், தண்ணீருkகான ஏடிஎம்
வாரணாசி: அசி நதியை சுத்திகரித்தல்
சூரத்: ஒருங்கிணைந்த மற்றும் நிலையான நீர் சப்ளை அமைப்பு
- நகர்ப்புற இயக்கம்
அவுரங்காபாத்: மஜிஹி ஸ்மார்ட் பேருந்துகள்
சூரத்: பேருந்து போக்க்குவரத்து திட்டம்
அகமதாபாத்: ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அமைப்பு மற்றும் தானியங்கி டிக்கெட் விநியோக இயந்திரங்கள்
- புதுமைக்கான விருது
இந்தூர்: கார்பன் கடன் நிதி அமைப்பு
- கோவிட் புதுமை விருது
கல்யாண்-டோம்பிவலி மற்றும் வாரணாசி
ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் கீழ் முன்மொழியப்பட்ட மொத்த திட்டங்களில், ₹1,78,500 கோடி மதிப்புள்ள 5,924 திட்டங்களுக்கு (115% எண்ணிக்கையில்) இதுவரை டெண்டர் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் ₹1,46,125 கோடி மதிப்புள்ள 5,236 திட்டங்களுக்கு (101% எண்ணிக்கையில்) பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.