ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையரை தொடர்பாக விவாதிக்கப்படும் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காஷ்மீர் அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த அழைப்பை ஏற்று ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றுகளுடன் கூட்டத்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சி தலைவர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.