தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, அடுத்ததாக கன்னட சினிமாவில் கால்பதிக்கவுள்ளராக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னட சினிமாவில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘மப்டி’. இந்த படம் தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்தி, ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் ‘பத்து தல’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
முன்னதாக இந்த படத்தை ‘மப்டி’ படத்தை இயக்கிய நாரதன் என்பவர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதை அடுத்து ஓபிலி கிருஷ்ணா என்பவர் இயக்குநராக ஒப்பந்தமானார்.
இந்நிலையில் நார்தன் அடுத்ததாக ‘கேஜிஎஃப்’ பட ஹீரோ யாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க படக்குழு தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விரைவில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகை தமன்னா கே.ஜிஎஃப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக நடிகர் யாஷுடன் குத்தாட்டம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.