இந்தியாசெய்திகள்

மேற்கு வங்கம்: முன்னாள் தலைமைச் செயலாளர் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை

70views

மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளார் அலபன் பந்தோபாத்யாய் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ள மத்திய அரசு அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

யாஸ் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்த்தார். இந்தக் கூட்டத்தில் அப்போது தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் கலந்துகொள்ளவில்லை. இதை தொடர்ந்து அவரை மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை தனது ஆலோசகராக நியமித்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்ததற்காக அலபன் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் அடிப்படையில் அவருக்கு வரவேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனால் அலபன் பந்தோபாத்யாய்க்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

மேற்குவங்கத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் கடுமையான பலப்பரீட்சை நடத்தியது. தேர்தலுக்கு சிலவாரங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தனர். கடுமையான மோதலுடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது, பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் வெற்றிபெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!