நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணியமான உடைகள் அணிய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புகார் மற்றும் கருத்துகளை தெரிவிக்க பள்ளி வளாகத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். புகார்களை பதிவு செய்ய மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாக பராமரிக்கும். வாய்மொழியாக உட்பட எம்முறையில் புகார் பெற்றாலும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.