செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரை மீது இன்றுமுதல் விவாதம்- ஜூன் 24 வரை பேரவைக் கூட்டம்

77views

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 24-ம் தேதி வரை நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது:

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்ஜூன் 22-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. 22, 23-ம் தேதிகளில்அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பேசி முடித்த பிறகு, 24-ம் தேதி விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் உரையாற்றுவார்.

22-ம் தேதி (இன்று) அவை தொடங்கியதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யாவாண்டையார், காளியண்ணன் கவுண்டர் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடரில், கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் தொடர்பான நிகழ்வுகள்இடம் பெறாது. சட்ட முன்வடிவுகள் இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!